×

செந்தூரப்பூவே..செந்தூரப்பூவே - 16 வயதினிலே ரம்யா பாண்டியன்!

16 வயதினிலே ஸ்ரீ தேவியாக மாறிய ரம்யா பாண்டியன்!

 

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டு கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் 16 வயதினிலே படத்தில் வரும் ஸ்ரீ தேவி போன்று வெள்ளை நிற தாவணி , கனகாம்பரம் பூ என டோட்டலா உருமாறியுள்ளார். இந்த போட்டோ இணையவாசிகளை ஈர்க்க ரம்யா பாண்டியன் வைரலாகி வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News