Categories: latest news television

உதவி இயக்குனரை கன்னத்தில் கும்மாங்குத்து….சீரியல் நடிகர் அடாவடி…சின்னத்திரையில் பஞ்சாயத்து….

சின்னத்திரை சீரியல் நடிகராக வலம் வருபவர் நடிகர் நவீன். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஹிட் அடித்த இதயத்தை திருடாதே சீரியல் மூலம் இவர் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். மசாலா படம், பூலோகம், பட்டாஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது அதே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ட நாள் முதல் சீரியலில் நவீன் நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பின் நவீன் படபிடிப்புக்கு வரவில்லை. எனவே, அந்த சீரியலில் உதவி இயக்குனராக பணிபுரியும் குலசேகரன் என்பவர் நவீனின் அறைக்கு சென்று அவரை அழைத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நவீன் அவரின் கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், அவரின் கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.

எனவே, நவீன் மீது குலசேகரன் சின்னத்திரை இயக்குனர் சங்கம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின் நவீன் அந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பரா இல்லை விலகிவிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா