Connect with us
cap

Cinema News

‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்கு பதில் கேப்டன் சிபாரிசு செய்த நடிகர் யார் தெரியுமா? அட இவரா?

Periyanna Movie: விஜய்க்கு எப்படி விஜயகாந்த் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்து ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாரோ அதே போல் சூர்யாவுக்கும் பெரியண்ணா படத்தில் கேப்டன் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார்,

அந்தப் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட சூர்யா யார்? அவரது நடிப்பு பற்றி வெளியில் தெரியவந்தது. இன்று கோலிவுட்டில் டாப் ஹீரோக்களாக வலம் வரும் விஜய், சூர்யா இருவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது விஜயகாந்த்.

இதையும் படிங்க: போதும்ட சாமி! உங்க சகவாசமே வேணாம் – திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மக்கள் செல்வன்

இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகரும் பிரபல இசையமைப்பாளரான சங்கர் கணேஷின் மகனுமான ஸ்ரீ பெரியண்ணா படத்தில் நடிக்க வேண்டியதே நான்தான் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது பெரியண்ணா படத்திற்கு முதலில் சூர்யாவுக்கு பதிலாக கேப்டன் சிபாரிசு செய்த நடிகர் ஸ்ரீதானாம்.

shree

shree

ஆனால் சூர்யாவை சிபாரிசு செய்தது நடிகர் விஜயாம். ஆனால் வாய்ப்பு சூர்யாவுக்கு போயிருக்கிறது. விஜயின் நண்பர் சஞ்சீவ் ஸ்ரீக்கும் நண்பர் என்பதால் ஒரு நாள் விஜய் ஸ்ரீயை பார்க்க வேண்டியிருந்ததாம். அப்போது ஸ்ரீயிடம் விஜய் ‘என்ன விஜயகாந்த் சார் உன் பேரை சொல்லிக்கிட்டு இருக்காரு’ என்று கேட்டதாக ஒரு பேட்டியில் ஸ்ரீ கூறினார்.

இதையும் படிங்க: எவ்வளவு கேஸ் போட்டாலும் கெட்டப் பையன் சார் இந்த அருண்! ‘கேப்டன் மில்லர்’ படத்தால் தயாரிப்பாளருக்கு வந்த சோதனை

இருந்தாலும் ஸ்ரீ ‘சூர்யா அதற்கு மிகவும் தகுதியானவர்தான். சினிமாவிற்கு நுழைந்த பிறகு சூர்யா பட்ட கஷ்டங்கள் எனக்கு தெரியும். நடனம் கற்றுக் கொண்டது, ஃபைட் கற்றுக் கொண்டது என மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்று ஸ்ரீ கூறினார்.

ஒரு வேளை பெரியண்ணா படத்தில் ஸ்ரீ நடித்திருந்தால் இந்நேரம் சூர்யா, விக்ரம் மாதிரி ஒரு பெரிய முன்னணி ஹீரோவாக மாறியிருப்பார்.

இதையும் படிங்க: குத்தாட்டமும் இல்ல.. கொண்டாட்டமும் இல்ல! கேப்டன் மறைவிற்கு அஜித் வராததற்கு முக்கிய காரணம்

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top