மகனுக்கு உதட்டில் முத்தம் - சீரியல் நடிகையை வரிந்து கட்டும் நெட்டிசன்ஸ்!
சீரியல் நடிகை:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுட்டு விழி சுடரே சீரியலில் மிக கம்பீரமான ரோல் ஏற்று நடித்து மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை வெண்ணிலா. இவர் அந்த சீரியலில் டிஎஸ்பி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் போல்டாக அசத்தி வருகிறார்.
நடிகை வெண்ணிலா தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவார். அந்த வகையில் தற்போது தனது மகனை கட்டிப்பிடித்து முத்தமிட்டது போல் ஒரு ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார் .
மகனுக்கு உதட்டு முத்தம்:

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் மகனை கூட இப்படி கெடுக்குறாங்க மகனை கட்டி பிடிக்கலாமா? மகனுக்கு இப்படியா முத்தம் கொடுப்பது சரியா ? என பலரும் அவரைத் திட்டி தீர்த்தார்கள். அதற்கு பதில் கொடுத்திருக்கும் சீரியல் நடிகை வெண்ணிலா என்னுடைய மகன் அவன் அவனை பெற்றவள் நான் அவனை கட்டி பிடிக்க முத்தம் கொடுக்க கொஞ்ச ஏன் தப்பு செய்தால் அடிக்க கூட எனக்கு எல்லாம் உரிமையும் இருக்கிறது .
அவன் தான் என்னுடைய சொத்து அவனிடம் என்னுடைய பாசத்தை நான் வெளிப்படுத்துகிறேன். அதில் எந்தவிதமான தவறும் எனக்கு தெரியவில்லை அது மட்டும் இல்லாமல் நான் வெளியிடும் இந்த ரீல்ஸ் பணத்துக்காக போடவே இல்லை எனக்கு பிடித்ததால் நான் பகிர்கிறேன். நான் பதிவிடும் இந்த பதிவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை பிளாக் செய்து விட்டு நீங்கள் செல்லலாம். ஏன் இப்படி மோசமான கமெண்ட் போட்டு அடுத்தவர்களை விமர்சிக்கிறீர்கள்? என துணிச்சலாக பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை வெண்ணிலா. அவரின் இந்த பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது
