Connect with us
lavanya

Cinema News

நான் ஹீரோயினை விட அழகா இருக்கேன்னு என்ன பண்ணாங்க தெரியுமா? வேதனையில் நடிகை

Serial Actress Lavanya: சின்னத்திரையில் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் நடிகை லாவண்யா. சமீபத்தில் சன் டிவியி ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலிலும் லாவண்யா நடித்திருக்கிறார். அருவி கணவனின் மூத்த அண்ணனுக்கு மனைவியாக நடித்துக் கொண்டிருப்பவர்தான் லாவண்யா. இவர் திரைப்படங்களிலும் ஏராளமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

படங்களில் ஹீரோயினுக்கு தோழியாகவும் ஹீரோவுக்கு தங்கையாகவும் நடித்திருப்பார். படையப்பா படத்தில் நாசருக்கு மனைவியாகவும் நடித்திருப்பார். பார்ப்பதற்கு மிக அழகாக வெளிர் நிறத்துடன் காணப்படும் லாவண்யா கிட்டத்தட்ட ஒரு ஹீரோயின் மெட்டிரியல் ரேஞ்சுக்குத்தான் இருப்பார். இவருக்கு 43 வயதில்தான் திருமணமே நடந்ததாம். ஆனால் இதை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டார் லாவண்யா.

இதையும் படிங்க: உச்சத்தில் வர வேண்டிய நடிகை… விபச்சார வழக்கால் தொலைந்த வாழ்க்கை…

இப்போதெல்லாம் இப்படித்தானே பெரும்பாலான நடிகைகளுக்கு திருமணமே நடக்கிறது என கூலாக பதில் சொன்னார். ஆனால் பார்ப்பதற்கு 43 வயதுடையவர் போல் இருக்காது. இன்னும் இளமையான தோற்றத்திலேயே காணப்படுகிறார் லாவண்யா. இந்த நிலையில் லாவண்யா சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் பல படங்களில் நான் நடித்திருக்கிறேன் என்றும் அதில் ஹீரோயின் மாதிரி இருக்கிறேன் என்பதற்காக மேக்கப்பில் எனக்கு கொஞ்சம் டல்லாக மேக்கப் போடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

ஹீரோயினை விட அழகாக தெரிவாராம் லாவண்யா. அதனால் ஃபோக்கஸ் அவர் பக்கம் போய்விடக் கூடாது என்பதாலேயே மேக்கப் விஷயத்தில் லாவண்யாவுக்கு பாரபட்சம் காட்டுவார்கள் என்று அந்த பேட்டியில் கூறினார். பல முன்னனி நடிகைகளுடன் நடித்திருக்கும் லாவண்யா அனைவருக்கும் தெரிந்த ஒரு நடிகையாகவே இன்று பார்க்கப்படுகிறார். அருவி சீரியலில் இவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: என் படத்தை பாக்க மாட்டேனு சொல்லிட்டாரு! ரஜினி பற்றி பகத்பாசில் சொன்ன சீக்ரெட்

Continue Reading

More in Cinema News

To Top