Connect with us
rakshita

Cinema News

மெசேஜ்… மிரட்டல்.. கணவர் மீது பரபரப்பு புகார் கொடுத்த ரக்சிதா…

விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ரக்‌ஷிதா. குறிப்பாக சரவணன் மீனாக்‌ஷி சீரியல் மூலம் ரக்சிதா அதிகம் பிரபலமானார். இவர் அதே விஜய் டிவியில் சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சென்னை போரூருக்கு அடுத்துள்ள ஐயப்பன் தாங்கலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர், கடந்த வருடம் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

rakshita

இந்நிலையில், தினேஷ் தனது மொபைல் எண்ணுக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் மாங்காடு காவல் நிலையத்தில் ரக்சிதா நேற்று இரவு புகார் கொடுத்தார். எனவே, இருவரையும் அழைத்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

rakshita

rakshita

சீரியல் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது, சில வருடங்களில் பிரிந்து விடுவது, அதன்பின் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஊடகங்களில் பேட்டி கொடுப்பது என்பது அதிகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ரக்சிதா – தினேஷ் விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

More in Cinema News

To Top