விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் தற்போது மீனாட்சி என்றால் இவர்தான் என்று அறியப்பட்டவர் நடிகை ரக்ஷிதா. கிட்டத்தட்ட 3 சீசன்களாக மீனாட்சியாக விஜய் டிவியில் வலம் வந்தவர்.
அதன் பின்னர், நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் விஜய் டிவி தொடரில் நடித்து வந்த ரக்ஷிதா, ஏதோ சில காரணங்களால் வேறு சேனலுக்கு தற்போது மாறிவிட்டார்.
இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது தனக்கு வந்த சினிமா வாய்ப்புகள் பற்றி பகிர்ந்து கொண்டார். விமல் – கயல் ஆனந்தி நடித்திருந்த மன்னர் வகைறா படத்திற்கு முதலில் ஹீரோயினாக நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அதேபோல கார்த்தி நடித்த ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
ஆனால், அந்த இரு படங்களுக்கும் தன்னால் தேதி கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் தற்போது வரை இருக்கிறதாம். சீரியலில் நடிக்க வந்துவிட்டால், அந்த சீரியல் முடியும்வரை எங்கும் செல்ல முடியாது. சினிமாவில் வாய்ப்பு தந்தாலும், உடனே அங்கு சென்று விடமுடியாது.
இதையும் படியுங்களேன் – ஷங்கர், முருகதாஸை அப்படியே பின்பற்றும் லோகேஷ் கனகராஜ்.! மனதார வாழ்த்தும் தமிழ் சினிமா.!
இங்கு நாங்கள் ஏற்கனவே சீரியலுக்காக தேதி ஒதுக்கி இருப்போம். அதனை மாற்றி தர முடியாது. அதன் காரணமாகவே சீரியல் நடிகைகள் சினிமாவில் நடிப்பது மிகவும் கடினம். எங்களுக்கு சீரியல் தான் முக்கியம். அதனாலேயே நல்ல வாய்ப்பு என்று தெரிந்தாலும் சில படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று மிகவும் மன வருத்தத்தில் ‘சரவணன் மீனாட்சி’ ரக்ஷிதா அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…