Connect with us
symantha

Cinema News

உயிரக் கொடுத்து நடிக்கிற சீனுக்கே டூப் போடாம நடிக்கிறாங்க! சாவுற சீனுக்கு டூப் போட்ட ஒரே நடிகை

Symantha: சினிமாவை பொறுத்தவரைக்கும் எந்த காட்சியானாலும் துணிந்து நடிக்கக் கூடிய நடிகர்கள் நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் பெரும்பாலும் சண்டை காட்சிகளை டூப் போட்டுத்தான் எடுப்பார்கள். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் பல முன்னணி நடிகர்கள் சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் இருந்தாலும் நானே நடிக்கிறேன் என துணிந்து நடித்து விடுகின்றனர்.

இது ஒரு பக்கம் அவர்கள் உயிருக்கு ஆபத்தை தருவதாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் வெளியாகி அவர்களின் மாஸ் இன்னும் அதிகமாக காரணமாக அமைந்து விடுகிறது. இதற்கு ஒரு உதாரணம் சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித் ஆரவ் சம்பந்தப்பட்ட அந்த சண்டைக் காட்சி வீடியோ வெளியாகி பெரும் வைரலானது.

அதில் ஜீப் விபத்துக்குள்ளாவதும் அஜித் எப்படி தைரியமாக நடித்தார் என்றும் பல பேர் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ஒரு சீரியல் நடிகை அவர் மரணமடைவது  போன்ற காட்சியில் நடிப்பதற்கே டூப் போட்டுத்தான் நடித்தாராம்.

விஜய் டிவியில் தென்றல் வந்து என்னைத் தொடும், ஈரமான ரோஜாவே, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்தவர்தான் ஸ்யமந்தா. சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமே சீரியல் மூலம் முதன் முதலில் மீடியாவிற்குள் அறிமுகமானார். அந்த நேரத்தில் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்க செல்லமே சீரியலில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

செல்லமே சீரியலில் ரத்னா என்ற கேரக்டரில் நடித்த ஸ்யமந்தா இப்போதும் ஒரு சீரியலில் ரத்னா என்ற கேரக்டரில் நடிப்பதாக கூறினார். செல்லமே சீரியலில் தற்கொலை செய்து கொண்டு இறப்பதாக அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அப்போது அந்த காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக உண்மையிலேயே மூக்கில் பஞ்சு வைத்தும் கால் விரல்களை கட்டியும் படுக்க வைத்திருக்கிறார்கள். இந்த காட்சியை ஸ்யமந்தா வீட்டில் அவர்கள் பெற்றோர்கள் பார்த்து மிகவும் கவலைப்பட்டார்களாம்.

Sy

Sy

அதனால் ஸ்யமந்தா இயக்குனரிடம் ‘இனி இந்த காட்சியை டூப் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்’என கூறி டூப் வைத்துதான் நடித்தாராம்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top