×

தொடர் தோல்வி... அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு....

 

பாகுபலிக்கு பின் அனுஷ்கா நடிப்பில் பாகமதி என்ற திரைப்படம் வெளியானது. ஆனால், அப்படம் வெற்றியடையவில்லை. அதன்பின் 2 வருடங்கள் கழித்து மாதவனுடன் அவர் நடித்த ‘நிசப்தம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் வெற்றி பெறும் என அவர் நினைத்திருந்த நிலையில் இப்படமும் ஊத்திக்கொண்டது.

எனவே, பாகுபலி, ருத்ரம்மாதேவி போல் சரித்திர கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிப்பது என அனுஷ்கா முடிவெடுத்துள்ளாராம். அதற்கு ஏற்றார் போல் சகுந்தலம் என்கிற தலைப்பில் ஒரு புராண கதையை திரைப்படமாகவுள்ளது. இந்த படக்குழு அனுஷ்காவை நாடியுள்ளது.  இப்படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் இயக்குகிறார்.

விசுவாமித்ர முனிவருக்கும்,மேனகைக்கும்  பிறந்தவர் சகுந்தலா. துஷ்யந்தனை காதலிக்கிறார். ஆனால், விசுவாமித்ரரின் கோபத்தினால் சாபம் பெற்று காதலி சகுந்தலாவை துஷ்யந்தன் மறக்க நேரிடுகிறது. அதன்பின் பல்வேறு போராட்டங்களுக்கு பின் காதலனை சகுந்தலை எப்படி கரம் பிடித்தார் என்பதுதான் கதை.

From around the web

Trending Videos

Tamilnadu News