×

காக்கா முட்டைக்கு ஏழாவது பிறந்தநாள்...
நெகிழ்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்....

 
kkmtta

காக்கா முட்டை தனுஷ் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய படம். சென்னை நகரின் சேரிப் பகுதியில் வாழும் 2 ஏழைச் சிறுவர்களுக்கு பணக்காரர்கள் உண்ணும் இத்தாலிய உணவான பீட்சாவைச் சாப்பிட வேண்டும் என தாங்க முடியாத ஆசை. இதையே மையக்கருத்தாக வைத்து படம் முழுவதையும் கொஞ்சமும் ஆர்வம் குறையாதவாறு நேர்த்தியாக கொண்டு சென்றிருப்பார் இயக்குனர். இப்படி கூட தமிழ் படத்தை எடுக்க முடியுமா என்று வியந்து பார்க்கும் வகையில் படத்தை யதார்த்தமாக கொண்டு சென்று இருப்பார். படத்தில் நடித்த இரு சிறுவர்களும் அவ்வளவு அழகாக சேரி பாஷையை கேஷ_வலாகப் பேசி நடித்திருப்பார்கள். 

கனடாவின் டொரோன்டோவில் 2014 செப்டம்பரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. மேலும் இத்தாலியின் ரோம் நகரம் மற்றும் துபாய் போன்ற நகரங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் தேர்வாகித் திரையிடப்பட்டது.

 இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஆறாண்டுகள் ஆகிறது. இந்தப் படத்தில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானார். முதல் படத்திலேயே 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து இருப்பார். அவரது நடிப்பிற்கு தீனி போட்ட படம் இது என்று கூட சொல்லலாம். அதன்பின்னர் பல ஹிட்டான படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகையானார். 

நெஞ்சிலிருந்து நீங்காத நினைவுகளுடன் அந்தப்படத்தைப் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் இப்படி பதிவிட்டிருக்கிறார்.

'காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது...! 6 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே நாளில் காக்கா முட்டை வெளியானது. எப்போதும் என்னுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மிகச்சிறந்த படம். தடைகளை உடைத்து என்னுடைய சினிமா வாழ்க்கையை உயர்த்தியது. இப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மணிகண்டன், தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி".

ஐஸ்வர்யா ராஜேஷ் 2011ல் வெளியான அவர்களும், இவர்களும் படத்தில் தான் அறிமுகமானார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சன்டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். பின்னர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து கிடைத்த வாய்ப்பு தான் சினிமா. நீதானா அவன், ரம்மி, அட்டகத்தி, வடசென்னை, கனா, காக்கா முட்டை. 2014ல் வெளியான காக்கா முட்டை படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

2014 ல் ஜூன் 5 ல் இப்படம் வெளியாகி  இன்றுடன் ஆறாண்டுகள் முடிகிறது. அப்படியானால் இன்று நள்ளிரவு 7வது பிறந்தநாள் தானே...காக்கா முட்டைக்கு...!

From around the web

Trending Videos

Tamilnadu News