Categories: Cinema News latest news

சிறுமியிடம் பாலியல் சீண்டல்… பிரபல மலையாள நடிகர் போக்ஸோவின் கீழ் அதிரடி கைது..

கடந்த சில மாதங்களாகவே சில நடிகர்களின் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துகொண்டு தான் வருகிறது. அந்த வகையில், பிரபல மலையாள நடிகரான ஸ்ரீஜித் ரவி சிறுமியின் முன் நிர்வாணத்தை வெளிப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் கதகளி, வேட்டை, கும்கி ஆகிய படங்களில்  நடித்துள்ளார்.

இந்த நிலையில்,  ஸ்ரீஜித் ரவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சூர் எஸ்.என் பார்க் அருகே   காரில் 11 மற்றும் 5 வயதுடைய இரண்டு குழந்தைகள் முன் நிர்வாணமாக தோன்றியுள்ளார். இது தொடர்பாக அந்த குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களால் குற்றம் சாட்டப்பட்டவரை சரியாக அடையாளம் காண முடியவில்லை.

இதனையடுத்து, காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து நிர்வாணமாக நின்றது நடிங்கர் ஸ்ரீஜித் ரவி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படியுங்களேன்- சிவாஜி கணேசன் குடும்பத்தில் வெடித்தது சொத்து தகராறு… நீதிமன்றம் வரை சென்ற பிள்ளைகள்…

அதன் பிறகு இன்று காலை திருச்சூர் மேற்கு போலீசார் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக போக்ஸோ வழக்கில் ஸ்ரீஜித் ரவியை அதிரடியாக கைது செய்தனர். மேலும்,  இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan