பிக்பாஸ் 4 சீசனில் கவர்ச்சி நடிகை... அப்ப செமையா களைகட்டும்!...

இந்த நிகழ்ச்சியும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசனே ஒரு வீடியோ மூலம் வெளியிட்டார்.
இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது. அந்தவகையில் டிக்டாக் பிரபலம் இலக்கியா மற்றும் நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ், வித்யு லேகா ராமன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இந்த முறை பிக்பாஸ் வீட்டில் நடிகை கிரண் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் மற்றும் நமீதாஆகியோர் கலந்து கொண்டனர்.. தற்போது கிரண் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிரது. கிரண் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அதன்பின் சில படங்களில் கவர்ச்சி விருந்து அளித்தார். இந்த செய்தி உண்மையானால் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.