×

டிக்டாக்கில் கவர்ச்சி வீடியோ ; தெறித்து ஓடிய காதலனை தேடி அலையும் இளம்பெண்...

டிக்டாக்கில் கவர்ச்சி வீடியோ வெளியிட்டதால் காதலியை காதலன் கை விட்டு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மதுரை ஆரப்பாளையத்தில் வசித்து வருபவர் கார்த்திக். இவருக்கும் டிக்டாக்கில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா என்கிற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்பெண்ணும் மதுரையை சேர்ந்தவர்தான். திடீரென ஒரு நாள் சற்று கவர்ச்சியான உடையில் திவ்யா டிக்டாக் வீடியோ ஒன்றை போட, அது கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் திவ்யாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். 

ஆனால், திவ்யா விடவில்லை. தன்னுடன் பேசுமாறு கதறி அழுத படி பல வீடியோக்கள் போட்டார். தன்னை நல்ல பெண் என்று கூறினால் கார்த்திக் என்னை ஏற்றுக்கொள்வதாக கூறுகிறான். எனவே, யாராவது அவனிடம் சொல்லுங்கள் என்கிற ரேஞ்சில் வீடியோக்களை போட்டு கதறினார். ஆனாலும், கார்த்திக் மனம் மாறவில்லை.

எனவே, கார்த்திக்கின் வீட்டின் முன்பு சென்று கதறி அழுது டிக்டாக் வீடியோ போட்டார் திவ்யா. நான் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன்... இனிமேல் உன் வீட்டிற்கும் வரமாட்டேன். எங்கோ போகிறேன். நீ நன்றாக இரு.. டேய் கார்த்திக் உன்னத்தான் காதலிக்கிறேன் என ஒரு வார்த்தை சொல் இப்போதே வீட்டிற்கு செல்கிறேன் என கதறி அழுது வீடியோக்களை வெளியிட்டார்.

இந்த பெண்ணின் சேட்டை தாங்க முடியாமல்தான் பையன் தெறித்து ஓடிவிட்டான் என டிக்டாக் பயன்படுத்துபவர்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News