Connect with us

Cinema News

ஷாருக்கானை ஏமாத்திட்டு சைக்கிள் கேப்பில் அட்லீ ஓட்டிய இன்னொரு படம்!.. மேடையில் வச்சு செய்த ஜவான்!..

ஷாருக்கானின் ஜவான் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஜய் வருவார் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், தம்பி அட்லீக்காக கூட விஜய் வரமுடியாத சூழலில் அமெரிக்காவில் அடுத்த படத்தின் வேலையில் பிசியாகி இருக்கிறார்.

ஜவான் படத்தில் விஜய் கேமியோவாக கூட நடித்திருக்க மாட்டார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிந்து விட்டது. ஜவான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ தனது மனைவி ஷூட்டிங் சமயத்தில் கர்ப்பமாக இருந்தார் என்றும், நடிகர் ஷாருக்கான் முதலில் மனைவியை போய் பாருங்க ஷூட்டிங்கை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்றார்.

இதையும் படிங்க:  ‘ஜெய்லர்’ வசூலை முறியடிக்க பலே திட்டம்! ஒரு மாசத்துக்கு முன்பே பட்டரையை போட்ட‘லியோ’ குழு – இது ஓவர்தான்

ஆனால், என் மனைவி நான் பார்த்துக்குறேன், உன்னால டைம் கிடைச்சா வந்து வந்து பார்த்துக்கோன்னு சொன்னார். டவுன் பஸ் போல மும்பைக்கும் சென்னைக்கும் பல முறை ரவுண்டு அடிச்சேன் என்றார்.

அதன் பிறகு கடைசியாக ஷாருக்கான் பேசும் போது, அதே மேட்டரை நக்கலடிக்கும் விதமாக இயக்குநர் அட்லீ கடந்த 3 வருஷமாக என்னோட ஜவான் படத்தை மட்டும் ப்ரொட்யூஸ் பண்ணல, அவருடைய குட்டி ஜவானையும் சைக்கிள் கேப்பில் ப்ரொட்யூஸ் பண்ணிட்டே இருந்திருக்காரு என பேச ஒட்டுமொத்த அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

இதையும் படிங்க: சம்மந்தி லியோவில் பிசியா இருக்காரு!.. ஐஸ்வர்யாகிட்ட பிடிச்ச விஷயம் இதுதான்!.. தம்பி ராமைய்யா பளிச்!..

நடிகர் விஜய் ஜவான் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்றாலும், நிமிஷத்துக்கு நிமிஷம் விஜய் ரெஃபரன்ஸ்களாலே நிறைந்திருந்தது. ஷாருக்கான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் திரண்டு வந்து பார்த்ததே விஜய் ரசிகர்கள் தான்.

லியோ படத்தின் பெயரை சொன்ன உடனே அரங்கமே ஆர்பரித்தது. என்னோட அண்ணன் விஜய் தான் ஜவான் படம் பண்ணவே காரணம் என்றும் அட்லீ பேசியது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ஜவான் படத்தை கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் பெரிதளவில் தமிழ்நாட்டில் பார்த்து ஓட வைப்பார்கள் என்றே தெரிகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top