×

ஷாருக் கான் வீட்டை வாடகைக்குக் கேட்ட ரசிகர் ! பாலிவுட் பாட்ஷாவின் பதில் என்ன தெரியுமா ?

பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மன்னட் வீட்டில் உள்ள ஒரு அறையின் வாடகை எவ்வளவு எனக் கேட்ட ரசிகருக்கு ஷாருக் நச் பதில் அளித்துள்ளார்.

 

பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மன்னட் வீட்டில் உள்ள ஒரு அறையின் வாடகை எவ்வளவு எனக் கேட்ட ரசிகருக்கு ஷாருக் நச் பதில் அளித்துள்ளார்.

தனது அசாத்திய உழைப்பின் காரணமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை ஹீரோவாக தன்னை மாற்றிக்கொண்டு சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஷாருக் கான். கடைசியாக அவர் நடித்த ஜீரோ படம் தோல்வி அடைந்ததால் அடுத்த படத்தில் கமிட் ஆகாமல் ஒரு வருடமாக இருந்து வருகிறார்.

இதையடுத்து ரசிகர்களின் கேள்விக்கு டிவிட்டரில் பதில் அளித்த அவரிடம் ரசிகர் ஒருவர் வித்தியாசமானக் கேள்வியை எழுப்பியுள்ளார். ஷாருக்கிடம் அவர் ‘உங்கள் வீட்டின் ஒரு அறையை வாடகை எடுக்க ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன விலை ஆகும் ? எனக் கேட்டுள்ளார். அதற்கு தனது குறும்பு பதிலை அளித்துள்ளார் ஷாருக்.

அதில் ‘அதற்காக நீங்கள் 30 வருடம் கடுமையாக உழைக்கவேண்டும்.’ எனத் தனது திரையுலக உழைப்பைக் குறித்து சொல்லியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News