Categories: Cinema News latest news

அதை போடக்கூடாதுனு செருப்பால அடிக்க வந்தாங்க… என்னை ஒன்னுமே பண்ண முடியாது.. சவால் விட்ட ஷகீலா

பி கிரேட் திரைப்படங்களில் நடித்து பெருவாரியான ஆண்களிடம் ரீச்சாகி இருந்தவர் நடிகை ஷகீலா. அவரின் திரை வாழ்வு பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரையும் தன் வசப்படுத்தி இருக்கிறார். ஒரு முறை சிலர் தன்னை செருப்பால் அடிக்க வந்ததாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

shakeela

ஒற்றை பாடல்களுக்கு நடனம் ஆடியதும், காமெடியை செய்ததும் ஷகீலாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. ஷகீலா மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, இவர் நடிப்பில் உருவான கிணரத்தும்பிகள் என்ற மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. பி கிரேட் நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.

ரோஜா & புவனேஸ்வரி

இந்நிலையில், நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கிற்காக சென்றபோது புர்கா போட்டு சென்றாராம். அங்கிருந்தவர்கள் இனி நீ புர்கா போட்டால் செருப்பால் அடிப்போம் என மிரட்டி இருக்கிறார்கள். இதில் கடுப்பான ஷகீலா, ஏன் ரோஜா, புவனேஸ்வரி எல்லாம் போட்டு வருகிறார்களே? அது உங்களுக்கு ஓகேவா? அவர்கள் எல்லாம் இழுத்து போர்த்தி கொண்டா நடித்தனர் என சண்டையிட்டு இருக்கிறார். இதை தனது பேட்டி ஒன்றில் கூறிய ஷகீலா, இவர்களுக்கு என்னை வம்புக்கு இழுக்கணும். என்னையெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது என சவால் விட்டு இருக்கிறார்.

Published by
Shamily