×

பிரபல நடிகர் குறித்து ஷகிலா சொன்ன பதில்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல மலையாள நடிகை ஷகிலா தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து இளைஞர்களிடையே பிரபலமானவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷகிலா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா என்பவர் நடித்து வருகிறார். இந்திரஜித் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது 

 

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷகிலாவிடம், பிரபல தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், மற்றும் அல்லு அர்ஜுன் பற்றி ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லும்படி கேட்கப்பட்டது. அப்போது அவர் ’மகேஷ்பாபுவை தனது சகோதரர் போன்றவர் என்றும் ’ஜூனியர் என்டிஆர் நல்ல நடனம் ஆடுபவர்’ என்றும் கூறினார். ஆனால் அல்லுர் அர்ஜூன் பற்றி தனக்கு தெரியாது என்று அவர் தெரிவித்தார்

இவ்வாறு ஷகிலா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் அல்லு அர்ஜுனை ஷகிலா தெரியாது என்று கூறியது அவரது ரசிகர்களுக்கு ஆத்திரமூட்டியது. இதனால் சமூக வலைதளங்களில் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் ஷகிலாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News