Connect with us
shalin

Cinema News

பாலியல் புகாரில் சிக்கிய நடிகருடன் நெருக்கமாக இருக்கும் cwc ஷோயா.. போச்சா?

Cook With Comali Joya:

ஒட்டுமொத்த இந்திய சினிமாவுமே தற்போது மலையாள சினிமாவில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளை பற்றி அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கின்றனர். அடுத்து எந்த சினிமா உலகம் மாட்ட போகிறது என்ற வகையிலும் கதிகலங்கிப் போய் நிற்கின்றனர். அதுவும் மலையாளத்தில் டாப் நடிகர்களாக இருக்கும் ஒரு சில நடிகர்களின் பெயர்கள் இதில் அடிபடுவதும் கூடுதல் அதிர்ச்சி.

தற்போது பிரபல நடிகரான சித்திக், ஜெயசூர்யா மற்றும் பாப்புலரான இயக்குனர்கள் என அடுத்தடுத்து பிரபலங்களின் பெயர்கள் நீண்டு கொண்டே போகின்றன. இதில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவரே மோகன்லால்தான் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: லிஸ்ட்ல நெம்பர் ஒன் இடத்தை பிடித்த மோகன்லால்.. அன்றே கணிச்ச ஷாரூக்கான்

இவர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து நடிகர் சங்கத்தையே கலைத்து விட்டனர். இது பிரபல நடிகை பூ பார்வது கடுமையாக விமர்சித்திருக்கிறார். நடிகர் சங்கத்தை கலைத்ததே ஒரு கோழைத்தனம் என்று பேசியிருக்கிறார் பார்வதி. இவர் ஏற்கனவே மலையாள சினிமாவில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பவர்.

joya

joya

தைரியமாக எதையும் பேசக் கூடியவர் பார்வதி. இன்னும் எத்தனை நடிகர்களின் பெயர்கள் வரப் போகிறது என தெரியவில்லை. இந்த நிலையில் பாலியல் கொடுமையில் சிக்கியுள்ள மலையாள நடிகரான இடைவேளை பாபுவுடன் பிரபல குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஜோயா இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: அமெரிக்காவிலும் வசூல் சாதனை படைத்த கோட்… 3 மணி நேரம் போறதே தெரியாதாம்..!

ஏற்கனவே கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஜோயா விஜய் டிவியில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர. இவர் பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசனின் பெண் தோழி ஆவார்.

Idavela Babu

Idavela Babu

இவர்தான் மலையாள நடிகர் இடைவேளை பாபுவுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இது மேலும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: டிக்கெட் ஓபன் செஞ்ச முதல் நாளே கோட்டுக்கு பஞ்சாயத்து… ஒன்னு கூடிட்டாங்கப்பா!

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top