Connect with us
jason

Cinema News

விஜய் மகனுக்கும் அஜித்துக்கும் உள்ள ஒரே ஒற்றுமை! ஷாக் கொடுத்த ஷாலினி அஜித்

Ajith Sanjay: இன்று தமிழ் சினிமாவிற்கே தளபதியாக விளங்கும் விஜய் அடுத்ததாக அரசியலை நோக்கி நகர இருக்கிறார். அதனால் சினிமாவிற்கு கொஞ்சம் பிரேக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜயின் மகனான சஞ்சய் விஜய் அடுத்ததாக அவருடைய இன்னிங்ஸை ஆரம்பிக்க இருக்கிறார்.

ஏற்கனவே கனடாவில் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து தேர்ச்சி பெற்ற சஞ்சய் சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் லைக்காவுடன் தன் முதல் படத்திலேயே களமிறங்க காத்திருக்கிறார் ஜேசன் சஞ்சய். அது சம்பந்தமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது.

இதையும் படிங்க: என்ன அண்ணே இது… ஃபகத் பாசிலுக்கு ஓவர் பில்டப் கொடுத்தது வீணா போச்சே.. வேட்டையனில் என்ன கேரக்டர் தெரியுமா?

சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக துருவ் விக்ரமும் அதிதி சங்கரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் அந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் மகன் இசையமைப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் படத்திற்கு பி.ஆர்.ஓவாக அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திராதான் பணியாற்ற இருக்கிறாராம். இதனால் படக்குழு ஆரம்பத்தில் சுரேஷ் சந்திராவை அணுகிய போது முதலில் சுரேஷ் சந்திரா தயங்கினாராம். இதை அஜித்திடம் தெரிவிக்க அதற்கு அஜித் தராளமாக போய் பணியாற்றுங்கள் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: என்ன நடிகன்னு நினைச்சியா!.. தப்பு செய்தவரை எட்டி உதைத்த எம்ஜிஆர்!. ராமாவரம் தோட்டத்து ரகசியங்கள்..

அதுமட்டுமில்லாமல் சஞ்சய்க்கு அஜித் தொலைபேசி மூலமாக அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது .அஜித்தை தொடர்ந்து அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்தும் சஞ்சய்க்கு தொலைபேசி மூலமாக அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறாராம்.

ஏற்கனவே அஜித் குடும்பமும் விஜய் குடும்பமும் ஒரு நல்ல நெருக்கமான நண்பர்களாகவே பழகி வந்த நிலையில் இப்போது சுரேஷ் சந்திராவும் இந்த குடும்பத்தில் இணைந்திருக்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல்.

இதையும் படிங்க: அரை மணி நேரத்தில் 6 பாட்டு!. 2 மணி நேரத்தில் ரெக்கார்டிங்!.. கமல் படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!..

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top