நேற்று வலிமை திரைப்படம் உலகம் முழுக்க கோலாகலமாக வெளியானது. ரசிகர்கள் பாலபிஷேகம், கட்டவுட், பேனர், தாரை தப்பட்டை என கொண்டாடி தீர்த்துவிட்டனர். முக்கிய நகரங்களில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கொண்டாடினர்.
அதனை நேரில் சென்று பார்க்க பல திரை பிரபலங்கள் முதல் காட்சிக்கு சென்றிருந்தனர். அதிலும், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சென்னை ரோகினி தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தார்.
இதையும் படியுங்களேன் – காத்திருந்து காத்திருந்து வெறுத்துப்போன சிம்பு படக்குழு.! இந்த நேரத்துல இதெல்லாம் தேவைதானா.?!
அப்போது ரசிகர்கள் அன்பு மிகுதியில் அவரது காருக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்துவிட்டனர். அந்த நேரம் அஜித்தின் மனைவி ஷாலினியும் இந்த முறை ரோகினி தியேட்டரில் சென்று படம் பார்க்க வந்துள்ளார்.அங்கு ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்த நடிகை ஷாலினி,
இங்கு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நாம் படம் பார்க்க முடியாது. மேலும், தயாரிப்பாரின் காருக்கே பாலபிஷேகம் என்றால் நமது காரை என்ன செய்வார்கள் என்று தெரியாது. என அங்கிருந்து வெளியேறிவிட்டாராம். அதன் பிறகு வேறு தியேட்டரில் படம் பார்த்தாரா என்று தெரியவில்லை.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…