தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருப்பவர்கள் தலயும் தளபதியும். இவர்கள் இருவரும் எது பேசினாலும் தமிழ்நாடே பரபரப்பாகிறது. இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் ஒன்று பேச, அது நாளிதழ்களில் திரித்து வெளியிடப்பட்டது.
அப்போது முதலே ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார் அஜித். அதுமட்டுமல்ல பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதில்லை. இதனால் அஜித்தை காண்பதற்காக ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஊமை விழிகள் போல் இரண்டு மடங்கு… விஜயகாந்தின் ‘மூங்கில் கோட்டை’என்னாச்சு?
அஜித்தைக்கான ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு திரையரங்கு மட்டுமே. இதனாலேயே இவரது படம் வெளியாகும்போதெல்லாம் அரங்கம் நிரைந்த காட்சிகளாக ஓடுகிறது. இதுமட்டுமல்ல அஜித்தை வெளியே எங்கு சந்தித்தாலும் ரசிகர்கள் சும்மா இருப்பதில்லை.
அவரை பின்தொடர்ந்து வீடுவரைக்கும் கூட செல்கின்றனர். அஜித் புகைப்படம் எது சிக்கினாலும் உடனே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். சமீபத்தில்கூட அஜித்தின் மகன் ஆத்விக் தனது மாமா ரிச்சர்ட்க்கு முத்தம் கொடுக்கும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தற்போது அஜித் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அஜித் கடந்த 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல கமலுக்கே சவால் கொடுப்பாங்க போலயே – பிக்பாஸ் அக்ஷராவின் லிப்லாக் வீடியோ!
இவர்களுக்கு அனௌக்ஷா, ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது அஜித், ஷாலினி தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இது எங்கே எடுத்தது என தெரியவில்லை. அஜித் நடிப்பில் உருவாக்கி வரும் வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிம்புவுடன் இணைந்த…
வடிவேலுவின் கோபம்…
தனுஷை வைத்து…
கூலி படத்தின்…
வெறுப்பை சம்பாதித்த…