Categories: Cinema News latest news

’அலைபாயுதே’ படப்பிடிப்பில் அஜித்தை நினைத்து உருகிய ஷாலினி..! உண்மையை கக்கிய மாதவன்…!

தமிழில் சினிமாவில் அழகான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஒரு நாயகியாக சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் நடிகை ஷாலினி. நடிகர் அஜித்தும் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்து ஒரு உயரமான இடத்தை அடைந்துள்ளார்.

இருவரும் அமர்க்களம் என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். படம் முடிந்ததும் இவர்களது திருமணம் அரங்கேறியது. ஆனால் அதற்கு முன்பாகவே இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த அலைபாயுதே படத்தின் போதே அஜித் ஷாலினி காதலித்துக் கொண்டுதான் இருந்தனர்.

அந்த படத்தின் போது மாதவனுக்கும் அப்பொழுதுதான் புதியதாக திருமணம் நடந்ததாம். ஷாலினியும் அஜித்துடன் காதலில் இருந்துள்ளார். அலைபாயுதே படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் ஷாலினியும் மாதவனும் நடிக்கும் போது ஷாலினி மிகவும் வருத்தப்படுவாராம்.

ஷாலினி மாதவனிடம் இந்த காட்சியில் உனக்கு பதிலாக அஜித் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? என அஜித்தை நினைத்து மிகவும் உருகுவாராம். இதை ஒரு பேட்டியில் மாதவனே வெளிப்படையாக தெரிவித்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini