மணிரத்னத்திற்காக மனமிறங்கிய அஜித்...மீண்டும் நடிக்க வரும் ஷாலினி..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. பல படங்களில் நடித்து சின்ன வயதிலேயே தனக்கென ரசிகர்களை சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து, நாயகியாக காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். படம் பெரிய வரவேற்பை பெற்றாலும், ஷாலினி தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலில் நடிப்பை கைவிட்டு கல்யாண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
தொடர்ந்து, அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருப்பது ஊரறிந்த சேதி தான். ஆனால், தற்போது ஷாலினி மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதுவும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் தான் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. மெகா பட்ஜெட் படம் என்பதாலும், மணிரத்னம் என்பதாலும் அஜித்தும் இதற்கு டபுள் ஓகே சொன்னதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு கடுமையாக படப்பிடிப்புகளை தொடர்ந்து நடத்து வருவது குறிப்பிடத்தக்கது.