குழந்தைகளுடன் செம கூல் அஜித்!.. தந்தையர் தினத்தை முன்னிட்டு ஷாலினி ஷேரிங்!..

 
ak

தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித் குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் அஜித்தும், குழந்தைகளான அனோஷ்கா மற்றும் ஆத்விக்கும் இணைந்து இருக்கும் பல அழகிய நினைவூட்டும் அற்புதமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிட்ட தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன. சமீப காலமாக குடும்பத்துடன் பிரான்சில் எடுத்த புகைப்படங்களையும் ஷாலினி பகிர்ந்து வந்த நிலையில், இந்த தந்தையர் தினப் பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார் திரைத்துறையிலும், கார் பந்தய உலகிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரது கார் பந்தய அணி சர்வதேச அளவில் முக்கிய சாதனைகளை படைத்து வரும் நிலையில், அதற்கான ஆவணப்படமும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் தாயார் மோகினி மணியின் மறைவுக்குப் பிறகு குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்த அஜித்தின் புகைப்படங்களை ஷாலினி பகிர்ந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

aj

திரைப்படங்களைப் பொறுத்தவரை, இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது அடுத்த படமான AK 64ல்  மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படப்பிடிப்பு தொடக்கம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

shal

தந்தையர் தினத்தை முன்னிட்டு ஷாலினி பகிர்ந்த இந்த குடும்ப புகைப்படங்கள், அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, அன்பான தந்தையும் என்பதை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளன.

Tags

From Around the web