Connect with us
shalini-ajith

Cinema News

இன்னும் ஷாலினிக்கு சரி ஆகலையா? மகன் செய்த வேலையை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு க்யூட்டஸ்ட் தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. இருவரும் சேர்ந்து அமர்க்களம் என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதிலிருந்து இருவருக்கும் இடையே காதல் ஏற்பட அமர்க்களம் முடிந்த கையோடு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அந்த நேரத்தில் இவர்கள் திருமணம் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது கோலிவுட்டில். அன்றிலிருந்து இன்று வரை இருவரும் இணைபிரியாமல் ஒருவருக்கொருவர் அதே அன்போடு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு ஷாலினி நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

குடும்பம், குழந்தை என ஒரு குடும்ப பெண்ணாகவே மாறி எல்லாப் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார். ஒரு பக்கம் மகளின் கல்வி இன்னொரு பக்கம் மகனின் விளையாட்டு என எல்லாவற்றையும் கவனித்து வருகிறார் ஷாலினி.

இதனால் அஜித் நிம்மதியாக இருப்பதோடு அவரும் சினிமாவில் கவனம் செலுத்த முடிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மைனர் சர்ஜரி ஒன்று ஷாலினிக்கு நடந்தது. அந்த நேரத்தில் அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருக்க சர்ஜரி முடிந்த அடுத்த நாள் தன் காதல் மனைவியை பார்க்க ஓடோடி வந்தார் சென்னைக்கு.

shalini

shalini

அப்போது மருத்துவமனையில் படுக்கையில் இருந்த ஷாலினியை காதலோடு பார்க்கும் அஜித்தின் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலானது. இந்த நிலையில் இன்னும் முழுவதுமாக உடல் நலம் தேறாத ஷாலினியை அவர் நெற்றியில் மகன் ஆத்விக் முத்தமிடும் காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இதை ஷாலினி தன் இணையதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top