×

ரியாலிட்டி ஷோவில் தனது கவர்ச்சி புகைப்படம் - கடுப்பில் வெளியேறிய ஷாலு ஷம்மு (வீடியோ)

ரியாலிட்டி ஷோவில் தனது கவர்ச்சி புகைப்படத்தை காட்டியதால் நடிகை ஷாலு ஷம்மு கோபமடைந்து வெளியேறிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார். 

பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஆடை எதுவும் அணியாமல் ரோஜா பூக்களால் உடலை மறைத்தபடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, ரோஜாபூக்களால் உடல் மறைக்கப்பட்ட அவரின் புகைப்படத்தை அவர்கள் ஒளிபரப்பினர். இதைக்கண்டு கோபமடைந்த ஷாலு அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 

இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News