×

இப்போ தான் புத்தி வந்துச்சா ஷாலுமா? ரசனையில் மூழ்கிய ரசிகர்கள்!

ஷாலு ஷம்மு லேட்டஸ்ட் போட்டோஸ்

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு.அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருவார். இதைத் தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஷாலு ஷ்ம்மு சினிமாவில் பெரிதாக பெயர் எடுக்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் மிகப்பிரபலம். காரணம் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களே ஆகும்.

கொரோனா ஊரடங்கில் வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியே தனக்கென தனி கூட்டத்தை உருவாக்கி பிரபலமானார். அதன் மூலம் கிடைத்த பெயரை வைத்து அம்மணிக்கு பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் கசிந்து கவர்ச்சி ரசிகர்களுக்கு இன்பத்தை கொடுத்தது.

இதனாலே பிக்பாஸ் வீட்டிற்கு போயே ஆகவேண்டும் என எண்ணி தொடர்ந்து சளைக்காமல் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது வழக்கத்திற்கு மாறாக கேரளா பெண் குட்டி போல் உடையணிந்து துளி கூட கவர்ச்சி காட்டாமல் குடும்ப குத்து விளக்கு போன்று போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார். இவரது கவர்ச்சியை கொஞ்சமும் விரும்பாத சில நல்ல உள்ளங்கள் இப்படியே லட்சணமாக இருங்க என அழகை வர்ணித்து தள்ளியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News