×

படமே ஆரம்பிக்கல அதுக்குள்ள பஞ்சாயத்தா?... கதை திருட்டில் சிக்கிய ஷங்கர் படம்....

ஷங்கர் இயக்கவுள்ள புதிய படம் கதை திருட்டு பஞ்சாயத்தில் சிக்கியுள்ளது.
 
shankar
ஹைலைட்ஸ்:
கார்த்திக் சுப்பாராஜின் உதவியாளர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் ஷங்கர் இயக்கவுள்ள திரைப்படத்தின் கதை தன்னுடையது என புகார் அளித்துள்ளார்

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். ஆனால், இவர் இயக்கும் திரைப்படங்களின் கதை தன்னுடையது எனவும், அதை ஷங்கர் திருடிவிட்டார் எனவும் சிலர் அவ்வப்போது வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது வழக்கமாகிவிட்டது. இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என ஒருவர் தொடர்ந்து வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 

அதன்பின் அவர் தனது அந்நியன் படத்தை பாலிவுட்டில் எடுக்க நினைத்தபோது அந்த கதைக்கு  தயாரிப்பாளர் என்கிற வகையில் அப்படத்தின் ரீமேக் உரிமை எனக்கே சொந்தம் என அந்நியன் பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஷங்கருக்கு குடைச்சல் கொடுத்தார்.

shankar

தற்போது ஷங்கர் ராம்சரனை வைத்து தெலுங்கு, தமிழில் உருவாகும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதற்குள் இப்படம் கதை திருட்டு பஞ்சாயத்தில் சிக்கியுள்ளது. இப்படத்திற்கான ஒரு வரிக்கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜிடம் இருந்து பெற்றார் ஷங்கர்.    அந்த கதைதான் தற்போது டெவலப் செய்யப்பட்டு வருகிறது. இது அரசியல் ஆக்‌ஷன் திரைப்படமாகும். 

shankar

இந்நிலையில், கார்த்திக் சுப்பாராஜின் உதவியாளர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் ஷங்கர் இயக்கவுள்ள திரைப்படத்தின் கதை தன்னுடையது என புகார் அளித்துள்ளார். இந்த சங்கத்தின் தலைவராக இருப்பவர் இயக்குனர் பாக்கியராஜ். ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் இதேபோன்ற பிரச்சனையில் சிக்கிய போது நியாயம் பெற்று தந்தவர் பாக்கியராஜ். ஷங்கர் படத்திற்கு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

shankar

இந்தியன் 2 பஞ்சாயத்து , அந்நியன் ரீமேக் பஞ்சாயத்து என தற்போதுதான் அதிலிருந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். அதற்குள் கதை திருட்டு புகார் எழுந்துள்ளது அவர் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

From around the web

Trending Videos

Tamilnadu News