×

எல்லா கண்டிஷனுக்கும் ஓகே.. ஷங்கர் நிலை இப்படி ஆகிப்போச்சே!...

 

ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வர், அந்நியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் என மெகா பட்ஜெட் படங்களை இயக்கியவர் ஷங்கர். தமிழ் சினிமாவின், ஏன் இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இயக்குனராக கருதப்பட்டவர். இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்பட்டதுண்டு.

2.0 படத்தில் தோல்வி மற்றும் கமலை வைத்து அவர் இயக்க நினைத்த இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் தற்போது அவரின் நிலைமையையே தலை கீழாக மாற்றியுள்ளது.  பல பிரச்சனைகளால் அப்படம் டேக் ஆப் ஆகவில்லை. இதில் 2 வருடங்கள் ஷங்கருக்கு வீணாய் போனது.  எனவே, தெலுங்கு பக்கம் சென்று சிரஞ்சீவி மகன் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்க முடிவெடுத்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. 

shankar

இந்நிலையில், இப்படத்திற்கு பின்னணியில் நடந்த சில சம்பவங்கள் நமக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது. ஷங்கர் இதுவரைக்கும் தான் இயக்கும் திரைப்படங்களுக்கான முழு கதை, பட்ஜெட், படப்பிடிப்பு எத்தனை நாள் என்கிற தகவலை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்ததில்லை. எல்லாம் வாய் மொழி தகவல்தான். ஆனால், ராம் சரணை வைத்து அவர் இயக்கும் படத்திற்கு முழுக்கதையை முதலிலேயே கொடுத்து விட வேண்டும் எனக்கூறிவிட்டனராம். அதேபோல், 120 நாட்கள் படப்பிடிப்பு, மீதமுள்ள 2 மாதத்தில் போஸ்ட் புரடெக்‌ஷன் என மொத்தம் 6 மாதத்தில் படத்தை முடித்து விட வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளனராம். ஆச்சர்யம் என்னவெனில் ஷங்கர் இதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். 

இப்படத்திற்கு ஷங்கருக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசி ரூ.10 கோடி முன்பணமும் கொடுக்கப்பட்டு விட்டது என்பது கூடுதல் செய்தி..
 

From around the web

Trending Videos

Tamilnadu News