Categories: Cinema News Gossips latest news

இந்தியன்-2 வேணாம்.. சிவாஜி-2 எடுங்க சார்.! ஷங்கரிடம் கெஞ்சும் ரஜினி ரசிகர்கள்.! காரணம் அதுதான்.!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த சமையத்தில்,  2007ஆம் ஆண்டு இந்த கூட்டணி முதன் முறையாக இணைந்தது. சிவாஜி எனும் பெயரில் ஏவிஎம் நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்தது.

அதுவரை இல்லாத தமிழ் திரைப்படம் அளவுக்கு இந்த திரைப்படம் வசூல் சாதனை செய்தது. அதன் பிறகு மீண்டும் இதே கூட்டணி எந்திரன் மற்றும் 2.o ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்களிலும் இணைந்தது. அந்த திரைப்படங்களும் வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தன.

ஆனால், சிவாஜி படம் அளவிற்கு ரஜினி ரசிகர்களை முழு திருப்திப்படுத்தவில்லை. ஏனென்றால், சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் மாஸ், ஸ்டைல், ஆக்ஷன் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதன் பிறகு வந்த எந்திரன் பாகங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மயமாக இருந்தன.

இந்நிலையில், சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரஜினிகாந்த் வீட்டிற்கு தனது மகள் உடன் இயக்குனர் ஷங்கர் சென்று இருந்தார். அப்போது அவர்கள் சந்தித்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்த, ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எந்திரன் அடுத்த பாகத்தை விடவும், இந்தியன் இரண்டாம் பாகத்தை விடவும்,  சிவாஜி படத்தின் இரண்டாம் பாகத்தை தயார் செய்ய தான் அதிகமாக கேட்டுக்கொண்டனர். மீண்டும் ஒருமுறை  சூப்பர் ஸ்டாரை அதே ஸ்டைலாக ஒரு பக்கா கமர்சியல் திரைப்படத்தில் பார்க்க வேண்டும்.  எங்களுக்காக அப்படிப்பட்ட படத்தை கொடுங்கள் என்று கேட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் –  தமிழக தொழிலாளர்களை புலம்ப வைத்த ரஜினி.! விரைவில் ஒரு பஞ்சாயத்து கன்ஃபார்ம்.!

ஏனென்றால், ரஜினிக்கும் அண்மையில் வெளியான திரைப்படங்கள் பெரிய அளவிற்கு போகவில்லை. சிவாஜி ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை அடுத்து வந்த எந்த ரஜினி திரைப்படமும் (பேட்ட திரைப்படம் ரஜினி ரசிகர்களை சந்தோஷப்பட வைத்தது) எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆதலால்,  இவர்கள் இருக்கும் புகைப்படத்தை பார்த்த உடன் ரசிகர்கள் தங்கள் ஆசைகளை கமெண்ட்கள் மூலம் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

விரைவில், ரசிகர்களின் கோரிக்கைகளை ஏற்று  ஏதேனும் அப்டேட் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Manikandan
Published by
Manikandan