Categories: Cinema News latest news

ப்ளீஸ் திட்டாதீங்க.. அந்த சம்பவம் உண்மைதான்… ஷங்கர் மகளால் வருத்தப்பட்ட ராஜலட்சுமி.!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை சூர்யா தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

படத்தில் இருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜாவும்  – அதிதி ஷங்கரும் இணைந்து பாடிய மதுரை வீரன் பாடலும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன்- ஜாதியை விட்டுக்கொடுக்காத சூர்யா.!? வெளியான பகீர் தகவல்.!

ஆனால், இந்த பாடலை முதன் முதலாக அதிதி ஷங்கருக்கு பதிலாக பிரபல பாடகியான ராஜலட்சுமி தான் பாடியிருந்தார். ஆனால், ராஜலட்சுமி பாடிய வெர்சனை ஒதுக்கிவிட்டு  ஷங்கரின் மகள் என்பதால் அதிதியைப் பாடவைத்துவிட்டார்கள் என்று பலரும் அதிதியை விமர்சித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக ராஜலட்சுமி சமீபத்திய ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் ” நான் “மதுரவீரன்” பாடலை பாடியது உண்மைதான். அதிதி ரொம்ப நல்லா பாடுறாங்க. அதனால, அந்த பாடலை பாட வச்சிருக்காங்க. எனக்கு நியாயம் கேட்பதா நினைச்சிட்டு தொடர்ந்து அதிதியை விமர்சன செய்வது எனக்கு மிகவும் வருத்தமா இருக்கு. ப்ளீஸ் இனிமே அதிதியை விமர்சனம் செய்யாதீங்க” என தெரிவித்துள்ளார்.

Manikandan
Published by
Manikandan