×

பாலிவுட்டில் உருவாகும் ஷங்கரின் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 
பாலிவுட்டில் உருவாகும் ஷங்கரின் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். லைக்கா தயாரிப்பில் கமலை வைத்து அவர் எடுக்க நினைத்த இந்தியன் 2 சில காரணங்களால் கிடப்பில் கிடக்கிறது. தற்போது அதை கைவிட்டு விட்டு தெலுங்கில் ராம்சரணை வைத்து அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கை உருவாக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

தற்போது இந்த செய்தியும் உண்மையாகியுள்ளது. ரன்வீர் கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.  இப்படத்தை ஜெயந்திலால் காடா என்பவர் தயாரிக்கவுள்ளார். 
 


 

From around the web

Trending Videos

Tamilnadu News