தொடர் தோல்வி.. விக்ரம் வாழ்க்கையை காலி பண்ணியதே ஷங்கர்தான்! அண்ணனே சொல்லிட்டாப்ல
விக்ரம்:
சமீபகாலமாக மற்ற மொழி சினிமாக்களில் இருந்து இங்கு வந்து அங்குள்ள ஹீரோக்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து அந்த அளவுக்கு எந்த ஒரு ஹீரோவும் மற்ற மொழிகளில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நம் தமிழ் நடிகர்களின் படங்களே சரிவர ஓடவில்லை. பிரம்மாண்டம் என்ற பெயரில் காசு தான் வீணாகிறது. தவிர நல்ல ஒரு கதை களத்தோடு படத்தை அவர்களால் கொடுக்க முடியவில்லை.
ஆனால் சின்ன பட்ஜெட் படங்கள் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால் திறமை இருந்தும் ஒரு சில நடிகர்களின் படங்கள் ஜெயிக்காமல் போவதற்கு என்ன காரணம்? அதில் குறிப்பாக விக்ரம். இவர் சினிமாவிற்காக இத்தனை வருட காலம் தன்னை மிகவும் வருத்தி எத்தனையோ போராட்டங்களை கடந்து சினிமாவிற்காகவே உழைத்துக் கொண்டிருப்பவர். அவரை சரிவர பயன்படுத்தவில்லையோ என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.
கதையில் கோட்டை விடும் விக்ரம்:
இன்னொரு பக்கம் அவர் கதைகளை தேர்ந்தெடுப்பதில் சொதப்புகிறாரோ என்றும் யோசிக்க வைக்கிறது. இந்த நிலையில் நடிகர் விக்ரமை பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது விக்ரமிடம் இருக்கும் ஒரு பிரச்சனையே ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் அவர் எடுத்துக் கொள்ளும் கால இடைவெளி என்று அந்தனன் கூறினார். அவர் மிகவும் பீக்கில் இருக்கும் காலத்தில் அந்நியன் என்ற ஒரு படத்தை தேர்வு செய்தார். அது வருஷ கணக்கில் இழுத்தடிக்கப்பட்டது. முக்கியமாக ஷங்கர் விக்ரமின் வாழ்க்கையை காலி பண்ணி விட்டார்.
ஏனெனில் ஒரு ஹீரோவை எத்தனை வருடம் தான் உங்களுடனேயே வைத்திருப்பீர்கள்? அதுவும் பிக்கில் இருக்கும் ஒரு ஹீரோவை கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று வருடங்கள் உங்களுடனேயே டிராவல் செய்ய வைத்தால் அந்த கால இடைவெளியில் அவர் இரண்டு படங்களில் நடித்திருக்க முடியும். அந்த நேரத்தில்தான் விக்ரமின் சமகாலத்தில் பயணித்தவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடித்து அவரை ஓவர் டேக் செய்து போய்க் கொண்டே இருக்கிறார்கள் .
ஏன் இந்த இடைவெளி?:
இதற்கிடையில் விக்ரமை இளைக்க வைக்கிறேன், உடலை பெருசாக்குகிறேன் என மாறி மாறி அவருடைய உடலையும் வருத்தி ஷ்ங்கர் அவருடைய வாழ்க்கையையே காலி செய்துவிட்டார். இதில் வருடங்கள் தான் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அவருடைய படங்கள் குறைந்து கொண்டே போகின்றன. இப்பொழுதும் மிகவும் ரிஸ்க்கான படங்களை தான் விக்ரம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடுவில் வெளியான சில படங்களை பார்க்கும் பொழுது ஏன் இந்த படங்களில் அவர் நடித்தார் என்று தான் தோன்றியது.
இப்பொழுதுதான் வீர தீர சூரன் படத்தின் மூலம் ஒரு கமர்சியல் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தங்கலான் படத்திற்கெல்லாம் அவர் போட்ட உழைப்பு வேற எந்த நடிகர்களாலும் முடியாது. ஆனாலும் அந்த படம் அவருக்கு என்ன பலனை கொடுத்தது என்பதையும் நம்மால் பார்க்க முடிந்தது. கதைக்காக தன்னை அர்ப்பணிக்கிறேன் என்று நினைத்து கால இடைவெளி தான் அவருக்கு ஒரு பெரிய வில்லனாக மாறி இருக்கிறது.
90களில் பார்க்கும் பொழுது ரசிகர்களின் மறக்க முடியாத படங்களில் விக்ரமின் படங்களும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக சேது ,அருள், சாமி என இந்த மாதிரி படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் சமீப காலமாக ஸ்கெட்ச் ,பத்து என்றதுக்குள்ள இந்த படங்களில் ஏன் அவர் நடித்தார்? ஒருவேளை கதை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விடுகிறாரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.