செல்வராகவன் போல மாற ஷங்கர் போட்ட திட்டம்!.. நடுவுல வந்த கவுஷிக் ரஜினிகாந்த்!.. இப்படி ஆகிப்போச்சே!..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அந்தப் படம் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் ஒன்று திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சுந்தர். சி வெளியேறிய பின்னர், இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் எனக் கூறப்பட்டது. அப்போது, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஷங்கர் களமிறங்கவிருந்தார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அட்லியின் உதவி இயக்குநர் தான் சிபி என்பதால் ஷங்கரும் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
ஆனால், பின்னர் 'தலைவர் 173' படத்தின் இயக்குநராக அஸ்வத் மாரிமுத்து இணைந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படத்தின் கதைக்களமும் கதாபாத்திரங்களும் மாற்றமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஷங்கர் வில்லனாக நடிக்க இருந்த வாய்ப்பும் கைநழுவியதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இயக்குநர் ஷங்கரை ரஜினிகாந்துக்கு எதிராக வில்லன் வேடத்தில் பார்க்கும் வாய்ப்பு தவறிவிட்டதே என்ற ஏமாற்றத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ’தர்மன்’ படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்ரன், ராஷி கன்னா உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரியும் நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
