×

வெளியானது ஷங்கர் படத்தின் புதிய போஸ்டர்.. சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட்..! 

பிரமாண்ட இயக்குனர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ஜெண்டில்மேன் படத்தின்மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், அந்நியன் என தொடர்ச்சியாக மெகா ஹிட் படங்களாக கொடுத்தார்.

 
shankar

பிரமாண்ட இயக்குனர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ஜெண்டில்மேன் படத்தின்மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், அந்நியன் என தொடர்ச்சியாக மெகா ஹிட் படங்களாக கொடுத்தார்.

இதில் இந்தியன் படம் தமிழ் சினிமா மட்டுமல்லாது அனைத்து இந்திய ரசிகர்களையும் கவர்ந்தது. ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடலில் உலக அதிசயம் எட்டையும் காட்டி அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். இதனால் இவர் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்பட்டார். 

இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படம் தெலுங்கில் 'அபரிஜித்துடு' என்ற பெயரில் வெளியாகி அங்கும் சூப்பர் ஹிட் ஆனது. ஷங்கர் தனது முதல்வன் படத்தை ஹிந்தியில் நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார். 

பின்னர் ரஜினியை வைத்து இயக்கிய 'எந்திரன்' படத்தின்மூலம் உலக அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து தமிழ் படங்களை மட்டுமே எடுத்து வந்த இவர் சமீபத்தில் ஹிந்தியில் ரன்வீர்சிங்கை வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்வதாக  அறிவித்தார்.


மேலும் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியின் மகன் 'மெகா பவர்ஸ்டார்' ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவதாக அறிவித்தார். தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். 

ராம் சரணின் RRR படத்திற்குப் பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க  குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News