ஆக்ஷன் த்ரில்லர் கதை சொன்ன ஷங்கர்... தனுஷ் இப்படி பண்ணிட்டாரே!
Aug 1, 2026, 17:07 IST
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து இயக்கிய 'இந்தியன் 2' திரைப்படம் தோல்வியடைந்து விட்டதால், 'இந்தியன் 3' எடுத்த வரைக்கும் போதும் என்று மீண்டும் பாக்கி இருப்பதை எடுக்காமலே வைத்து விட்டார்கள்.
இவரது கனவு படமான 'வேள்பாரி'-யை தயாரிக்கவும் யாரும் முன் வரவில்லை. இதனால் ஷங்கர் 70 நாட்களுக்குள் எடுத்து முடிக்கும் வகையில் ஒரு ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்தார்.
இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் கதையாம். இதில் யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
தற்போது, இயக்குநர் ஷங்கர் இந்த ஐடியாவை தனுஷிடம் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்ட தனுஷ் இதில் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லி விட்டாராம்.
