ஒரே நாயகி... இரண்டு படத்துக்கு ஓகே செஞ்சிரலாம்... லக்கடித்த நாயகி யார் தெரியுமா?

தமிழில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தை தொடர்ந்து படம் நிறுத்த வைக்கப்பட்டது. இடஹி தொடர்ந்து, ஷங்கர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் திரும்பி இருக்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்கும் படத்தை ஷங்கர் அடுத்து இயக்க போவதாக அறிவித்து இருக்கிறார். நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் உருவாக இருக்கிறது.
அதேப்போல, தமிழின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படமான அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விக்ரம் நடித்த கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ஏற்க இருக்கிறார். இவ்விரண்டு படங்களுக்குமே நடிகை கியாரா அத்வானியை நாயகியாக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.