Categories: Cinema News latest news throwback stories

ரஜினி சார் செஞ்சது.. எனக்கு ரெம்ப அசிங்கமா போய்டிச்சி.! வேதனையில் ஷங்கர் கூறிய சம்பவம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் எப்படி தெரிகிறாரோ தெரியாது. ஆனால், பழகியவர்களுக்கு அவர் மனசு குழந்தை மாதிரி. ரெம்ப நல்ல மனிதர் என்ற பதிலே கிடைக்கும். அதுதான் உண்மையும் கூட.

இயக்குனர் ஷங்கர் அவருடன் 3 திரைப்படங்களை செய்துவிட்டார். அந்த  3 திரைப்படங்களும் மிக பெரிய வசூல் பெற்ற மெகா ஹிட் திரைப்படங்களாக இருக்கின்றன.

ஷங்கர் ரஜினி பற்றி அண்மையில் ஒரு நேர்காணலில் கூறுகையில், ‘ நான் ரஜினி சாரை வைத்து படம் இயக்குவதற்கு முன்னர், ஒரு முறை அவரை ஒரு விழாவில் பார்த்துவிட்டேன்.

இதையும் படியுங்களேன் – லண்டன் பறந்த அஜித்.! மீண்டும் வலிமையை ஞாபகபடுத்திய H.வினோத்.! பதற்றத்தில் ரசிகர்கள்…

பிறகு அவரிடம் சென்று நேரடியாக பேசலாமா வேண்டாமா? என பார்த்தும் ஒரு ஓரமாக ஒதுங்கிவிட்டேன். ஆனால் அவர் என்னை பார்த்துவிட்டார். உடனே, வந்து என்னிடம், ‘ஹாய் ஷங்கர் எப்படி இருக்கீங்க , என்ன இந்த பக்கம் ‘ என கேட்டுவிட்டார். அந்த இடத்தில் எனக்கு ஒரே அசிங்கமாய் போச்சி.

ஒருவரை பார்த்தால், யார் முதலில் பேசுவது , நீயா நானா யோசித்து நின்று கொண்டிருக்காமல், போய் ஒரு ஹாய் சொல்லி ஆரம்பிச்சிட்டோம்னா எல்லா முடிஞ்சிரும். அப்போது இருந்து நான் அதனை மாற்றிக்கொண்டேன் .’ என ரஜினியுடனான அந்த சந்திப்பை வெளிப்படையாக கூறினார் இயக்குனர் ஷங்கர்.

Manikandan
Published by
Manikandan