×

இந்தியன் 2 விபத்தால் மனமுடைந்த ஷங்கர் - அதிர்ந்து போன திரையுலகம்
 

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து பற்றி அப்பட இயக்குனர் ஷங்கர் ஒரு உருக்கமான கருத்தை தெரிவித்துள்ளார்.
 

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்த உதவி இயக்குனர் ஒருவர் உட்பட 3 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அப்படத்தின் இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘உச்சகட்ட துக்கத்தில் டிவிட் செய்கிறேன். அந்த சம்பவம் நடைபெற்றது முதல் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன். தூக்கமில்லா இரவுகள்.. என் உதவியாளர் மற்றும் சிலரை இழந்துவிட்டேன். அது நானாக இருந்திருக்கலாம்.. அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆறுதலும், பிரார்த்தனைகளும்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News