இந்தியன்2 படம் தற்காலிகமாக நிறுத்தம்... முதலில் ராம்சரண் தான்... பக்கா ப்ளானில் ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். தமிழில் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால், அப்படப்பிடிப்பில் ஏற்பட்ட பெரிய விபத்தால் படக்குழுவே சோகத்தில் ஆழ்ந்தது. தொடர்ந்து கொரோனா பிரச்சனை வர படப்பிடிப்புகள் மொத்தமாக நிறுத்தப்பட்டது.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்கும் படத்தை ஷங்கர் அடுத்து இயக்க போவதாக அறிவித்து இருக்கிறார். நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் உருவாக இருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், ஷங்கரிடம் இந்தியன்2 படப்பிடிப்புகள் எப்போது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது கமல் தனதுஅரசியல் பணிகளில் பிஸியாக இருக்கிறார். சட்டசபை தேர்தலும் நெருங்கி வருவதால், தேர்தல் வேளைகளை எல்லாம் முடித்துவிட்டு தான் கமல் நடிப்புக்கு திரும்புவார். அதற்குள், ராம்சரணின் படத்தினை முடித்து விட்ட பின்னரே இந்தியன்2 படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தெரிவித்து இருக்கிறார்.