×

இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத ஷங்கர் – கடிதம் மூலம் மீண்டும் அஞ்சலி!

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தால் இயக்குனர் ஷங்கர் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என கடிதம் மூலம் விளக்கியுள்ளார்.

 

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தால் இயக்குனர் ஷங்கர் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என கடிதம் மூலம் விளக்கியுள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தால் கடந்த வாரம் முழுவதும் தமிழ் சினிமாவில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் விசாரணை அதிகாரிகளால் நேற்று முன் தினம் விசாரிக்கப்பட்டார். விபத்தில் தன் உதவி இயக்குனர் உள்பட மூன்று பேரை பலி கொடுத்த ஷங்கர், விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். இதையடுத்து அவர் இன்னும் விபத்து நடந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என தெரிகிறது.

ஏற்கனவே டிவிட்டரில் தன் இரங்கலை தெரிவித்த ஷங்கர் இப்போது நீண்ட கடிதத்தின் மூலம் மீண்டும் அஞ்சலியையும் தனது மன உளைச்சலையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது கடிதத்தில் ‘விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லைமீள முயன்று கொண்டிருக்கிறேன்.ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project- சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா.

எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய production boy மதுவை அன்று mortuary-ல் பார்த்ததும் உடைந்துவிட்டேன்.

Art Department சந்திரன், இந்தியன்-2 செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது என்று விரும்பி வந்து, இந்த schedule-ல் தான் வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்ட போது துக்கம் தாளவில்லை.மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு,

ஷங்கர்.

From around the web

Trending Videos

Tamilnadu News