ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜென்டில்மேன் படத்தின் கதை காப்பி என முக்கிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது. ஷங்கரின் அறிமுக படம் தான் ஜென்டில்மேன். சரத்குமார், டாக்டர் ராஜசேகர் பலர் மிஸ் செய்த கதையில் நடிக்க அர்ஜூன் ஒப்புக்கொண்டு நடித்தார். அப்போதே மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு மாஸ் ஹிட் அடித்த படம்.
Gentleman
முதலில் வேறு ஒரு கிளைமேக்ஸ் படமாக்கப்பட்டு இருந்த நிலையில், ஸ்ரீலங்கா அதிபரின் கொலை மாதிரி இப்படத்தின் கிளைமேக்ஸினை மாற்றலாம் என்பது தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனின் ஐடியா. அதன்படி மாற்றங்கள் செய்யப்பட்டு தான் படம் ரிலீஸாகியது.
இந்நிலையில் இப்படத்தின் கதை கண்ணதாசனின் கருப்பு பணம் படத்தின் கதை தான் என அவரின் மகன் கண்மணி சுப்பு தெரிவித்து இருக்கிறார். 1964ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தான் கருப்பு பணம். இப்படத்தில் கண்ணதாசனே நடித்திருந்தார். மிகப்பெரிய பணக்காரர்கள் வைத்திருக்கும் கருப்பு பணத்தை அவர்களிடம் இருந்து பறித்து ஏழைகளுக்கு வழங்குபவரைப் பற்றிய கதையாக இது அமைந்து இருந்தது. இதன் சாராம்சத்தை அப்படியே உருவி தான் ஷங்கர் ஜென்டில்மேனை உருவாக்கி இருந்தார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார் கண்மணி சுப்பு.
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…
Idli kadai:…
Vijay: கரூரில்…