×

ஓவர் கோட்.. கையில் நாய்.. அப்படியே அப்பா... விஜயகாந்த் மகனின் அசத்தல் போட்டோஷூட்...

 

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக பல படங்களில் நடித்து ரசிகர்களை கொண்டவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். அதன்பின் தேமுதிக எனும் அரசியல் கட்சியையும் துவங்கினார். தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்து வருகிறது.

விஜயகாந்த் புலன் விசாரணை உள்ளிட்ட பல படங்களில் ஓவர் கோட் மற்றும் கையில் நாயோடு வலம் வருவார். தற்போது அவரின் மகன் சண்முக பாண்டியனும் அதே போல் மேக்கப் போட்டு போஸ் கொடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த பலரும் ‘அப்படியே அப்பா மாதிரியே இருக்கீங்க’ எனக் கூறி வருகின்றனர்.

சகாப்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகானார் சண்முகபாண்டியன். அதன்பின் மதுர வீரன் என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்தார். அதன்பின் விஜயகாந்துடன் இணைந்து அவர் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்கிற படம் துவங்கப்பட்டது. ஆனால், அது அறிவிப்போடு நின்று போனது குறிப்பிடத்தக்கது. 

shanmuga

From around the web

Trending Videos

Tamilnadu News