×

மாஸ்டர் ‘வாத்தி’ பாட்டுக்கு ஷாந்தனு போட்ட செம டான்ஸ் - வைரல் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. நல்ல குத்தாட்ட பாடலாக இது அமைந்துள்ளது. 
 

இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள ஷாந்தனு  அப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி மற்றும் நடனக்குழுவினர் இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

தனுஷ் நடித்த பட்டாஸ் படம் வெளியான போது அப்படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு இதேபோல் நடனமாடி அவர் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டி டிவிட் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News