×

கெளதம் மேனன் இயக்கத்தில் சாந்தனு - சிம்பு ஸ்டைலில் காதலர்களுக்கு குறி வைக்கிறாரா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல ஹீரோக்கள் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சான்ஸிற்காக காத்திருப்பார்கள். அந்தவகையில் தமிழ் இயக்குனர்களிலேயே சற்று வித்யாசமாக , ஸ்டைலீஷாகப் படம் பண்ணுபவர் கெளதம் வாசுதேவ் மேனன்.

 

இவரது இயக்கத்தில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம், மின்னலே வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா’ இப்படி தான் இயக்கிய அத்தனை படத்திலும் அந்தந்த காதலுக்கு உயிர் கொடுத்து உருவாக்கியிருப்பர். இந்நிலையில் தற்ப்போது இந்த கொரோனா லாக்டவுனில்  ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை  இயக்கி VTV கார்த்திக் - ஜெஸியை நம் கண் முன் நிறுத்தினார்.

இதையடுத்து தற்போது நடிகர் சாந்தனு - மெகா ஆகாஷை வைத்து 'ஒரு சான்ஸ் குடு' எனும் வீடியோ பாடல் உருவாக்கியுள்ளார். மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். இப்பாடலின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இதன் முழு பாடலை கேட்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News