அன்று தாலி எடுத்து கொடுத்தீங்க.... இன்று என் அப்பாவுக்கு - சாந்தனு உருக்கம்!

 
vijay shanthanu

தமிழ் சினிமாவில் மறைந்த இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கின் போது தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய் அவர்கள் இறந்த பாக்கியராஜ் அவர்களுக்கு தமிழக அரசின் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி பாக்யராஜின் உடலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து சாந்தனு உருக்கமாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது," என் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்து என் மகிழ்ச்சி திருநாளை துவக்கி வைத்தீர்கள்.

vijay shanthanu

அதற்கே நான் என்றும் நன்றி கடன் சொல்லி தீர்க்கவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள் பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கி விட்டு என் அம்மாவிடம் மண்டியிட்டு ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன். "அரசு மரியாதை" மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம்.

பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேற என்ன சொல்ல இதயம் கூப்பிய நன்றி அண்ணா என தமிழக முதல்வர் சிஎம் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு தனது உருக்கமான நன்றியை தெரிவித்திருக்கிறார் சாந்தனு இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

From Around the web