ப்ரோ நீங்க கொடுத்த பில்டப் அப்படி... மாஸ்டரால் சாந்தனுவை கதறவிடும் நெட்டிசன்கள்

விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் முக்கிய வேடம் ஏற்று இருந்தார்கள். ஆனால் அளவுக்கதிகமாகவே படத்தில் நிறைய நடிகர்கள் இடம்பெற்றனர். இதனால் பலருக்கும் நடிக்க சீன்கள் கிடைக்காமல் போனது. இதில் நடிகர் சாந்தனு பாக்கியராஜூம் ஒருவர். அவருக்கு படத்தில் அதிகபட்சமே ஐந்தாறு காட்சிகள் தான் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் படத்தில் இருக்காரா என பலரும் கலாய்த்தனர்.
இதே நேரத்தில், தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதை கண்டெண்ட்டாக வைத்து மாஸ்டரில் பார்கவ்வாக நடித்த சாந்தனுவிற்கும் தேசிய விருது போல புகைப்படம் வடிவமைத்து வைரல் ஆக்கி கலாய்த்தனர். இந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்த சாந்தனு, மற்றவர்களால் கலாய்க்கப்படுவது ஒரு சின்ன சந்தோஷம். என் மீது தெரிந்தோ தெரியாமலோ வீசப்படும் கற்களுக்கு நன்றி. நீங்களே சொல்லீட்டிங்க, நடக்காம போயிடுமா? இதுவும் ஒரு நாள் நடக்கும் என கடுப்பில் பதில் போட்டார்.
நீங்க குடுத்த build-up தான் ப்ரோ அதுக்கெல்லாம் காரணம் .... இனிமே அப்டி பண்ணாதீங்க ..... Move on 👍
— பிரவீன்ᶜᶦⁿᵉᵐᵃᵃᵛᵃᶦ ⁿᵉˢᶦᵖᵃᵛᵃⁿ🎞📽🎬 (@smithpraveen55) March 25, 2021
Advice குடுக்குற அளவுக்கு நானும் பெரியவன் இல்ல both in age and experience 🙏
இருந்தாலும் சொல்றேன் 😊 சொல்லணும்ன்னு தோணுச்சு
அதிலும், இறங்கிய சில நெட்டிசன்கள் இதுக்கெல்லாம் உங்க வாய் தான் ப்ரோ காரணம், இனிமே கதை கேட்டு நடிங்க என பலரும் அட்வைஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.