
Cinema News
Shanthanu: நான் பண்ண தப்பு இதுதான்!.. இப்ப புரிஞ்சிடுச்சி!… ஃபீல் பண்ணி பேசிய சாந்தனு!….
இயக்குனர், நடிகர், திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் வாரிசாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அவரின் மகன் சாந்தனு. என்ன காரணமோ துவக்கம் முதலே அவருக்கு சரியான கதைகளும், படங்களும் அமையவில்லை. அவர் நடித்த படங்கள் வெற்றியை பெறவில்லை.
மிஸ் பண்ணிய திரைப்படங்கள்:
இத்தனைக்கும் சக்கரக்கட்டி என்கிற படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் ஹிட் அடித்தாலும் படம் ஹிட் அடிக்கவில்லை. ஒருபக்கம் சுப்பிரமணியபுரம், காதல் போன்ற பட வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அந்த கதைகள் சாந்தனுவுக்கு பொருத்தமாக இருக்காது என அவரின் அப்பா பாக்கியராஜ் மறுத்துவிட்டதாக சொல்லப்பட்டது.
விஜய் சேதுபடி வளர்ந்தது எப்படி?:
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சாந்தனு மனம் திறந்து ஒரு விஷயத்தை பேசி இருக்கிறார். நான் சினிமாவில் அறிமுகமாகும் போது சாந்தனு பாக்யராஜ் என்றுதான் அறிமுகப்படுத்தினார்கள். முதல் படம் ஓடவில்லை. எனவே எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த தயாரிப்பாளர்கள் பின்வாங்கி விட்டனர். நானும் தொடர்ந்து பல முயற்சிகள் செய்தேன். எதுவும் சரியாக அமையவில்லை. அதன் பின்புதான் பொறுமையாக அமர்ந்து யாரெல்லாம், எப்படி வெற்றி பெற்றிருக்கிறார்கள் என யோசித்தேன்.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, மணிகண்டன் போன்றவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என யோசித்தேன், அவர்கள் படிப்படியாக மேலே உயர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன், விஜய் சேதுபதி புதுப்பேட்டை படத்தில் ஒரு காட்சியில் கூட்டத்தில் நின்று கொண்டிருப்பார். முதலில் தனது முகம் பிரேமில் வராதா என ஆசைப்பட்டார். அதன்பின் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அதன்பின் அவர் ஹீரோவாக மாறினார்.
இப்போது நான் புரிந்து கொண்டேன். ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாவது போல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இந்த காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் இதையெல்லாம் விட்டுவிட்டு நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து படிப்படியாக உயர வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன். ஹீரோ என்பதெல்லாம் தேவையில்லை. அப்படி நினைத்ததால்தான் புளூ ஸ்டார் படத்தில் நடித்தேன். இப்போது நடித்து வரும் தங்கம், பல்டி படங்களில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள்’ என பேசியிருக்கிறார்.