×

திருமணம் செய்வதாக ஏமாற்றினார்...கருகலைப்பு செய்து அடித்து துன்புறுத்தினார்.. அமைச்சர் மீது நடிகை புகார்...

 
shanthini

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். அதன்பின் சில காரணங்களால் அவரிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

இவர் மீது சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சாந்தினி தேவா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 வருடங்களாக ஏமாற்றி வருவதாகவும், தன்னை கருக்கலைப்பு செய்ய அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்பித்துள்ளார்.

இந்த விவகாரம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News