வாயில் ரோஜா!.. கையில் துப்பாக்கி!. ஷாருக்கானின் ‘கிங்’ போஸ்டர் மிரட்டுதே!..

 
king

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் கிங் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  வெளியாகவுள்ளது.

அந்த போஸ்டரில், வாயில் ரோஜாவைக் கடித்து கையில் துப்பாக்கியுடன் நேருப்புக்கு நடுவே ஷாருக்கான் நடந்து வருவது போன்ற காட்சி செம்மா மாஸாக உள்ளது. அவரது இந்த வித்தியாசமான லுக் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

king

ஏற்கெனவே பதான் படத்தின் மூலம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ஷாருக்கான் மற்றும் சித்தார்த் ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன், காதல் என கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் கிங் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Tags

From Around the web